Thursday, March 4, 2010

நித்யானந்தாவும் நிவேதிதானந்தாவும்


வலைப்பதிவுகளைச் சுற்றிப்பார்த்து உலக அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்று நான் ஆர்வத்துடன் முயற்சி செய்துகொண்டிருந்த சமயம் பார்த்து இத்தனை கூத்துகள் நடைபெறுவதை என்னவென்று சொல்ல? எங்கு திரும்பினும் அவன் படம், அவன் புகழ், அவனது காணொளி காட்சிகள், அவன் குறித்த கதம்ப விவாதங்கள். தூணிலும் அவன்தான், துரும்பிலும் அவன்தான்.

என் கண்களால் நம்பவேமுடியவில்லை! சாரு நிவேதிதாவின் வலைத்தளம் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது. முந்தா நாள் பார்த்த நித்யாவின் படம் நேற்று இல்லை. நேற்று பார்த்த ஒரு பதிவு இன்று இல்லை. இன்று இருக்கும் வலைப்பதிவு நேற்றையது போல் இல்லை. புகைப்படம், எழுத்துகள், வடிவம், உருவம் அனைத்துமே மாறிக்கொண்டிருக்கின்றன. பழைய கட்டுரைகள் காணக்கிடைக்கவில்லை. புதியவை மாயமாக மறைகின்றன. நித்யநிலையாமைத் தத்துவம் இன்று இதனை அழைக்கலாமா?



நித்யா முழுவதுமாக அம்பலப்பட்டுப்போன இந்தத் தருணத்தில், சாருவால் மழையில் நனைந்த கோழிபோல் வெடவெடவென்று தடுமாற மட்டுமே முடிகிறது. சும்மா சும்மா ஏன் என்னையும் அவரையும் லிங் பண்ணுகிறாய் என்று அறச்சீற்றத்தை எழுப்புகிறார். அவன் ஃபோட்டோவை என் சைட்டில் போட்டால், அவன் செய்யும் தவறுகள் என்னுடையதாகிவிடுமா என்று தர்க்கம் செய்கிறார். மறுகணமே, அவனை நம்பி நான் ஏமாந்துட்டேனே அதுகூட உங்களுக்குத் தெரியலையா என்று உடைந்து அழுகிறார். நான் அழுதால் அதற்காக என் கண்ணீரை ஏன் துடைத்துவிடுகிறாய் என்று தன் வாசகர்கள் மீது விழுந்து பிராண்டுகிறார். பிறகு, ஆயிரம் இருந்தாலும் அவன் ஒரு ஞானிதான் என்று சிலாகிக்கிறார். ஆசிரமத்துக்குச் சென்றுள்ள தன் மனைவியின் உயிருக்கு ஆபத்து என்று பிதற்றுகிறார்.

பிறகு, இப்படியும் சொல்கிறார்.

'இப்போதும் சொல்கிறேன், நித்யானந்தர் எழுதிய புத்தகங்கள் 300 இருக்கும். அத்தனையும் நம் இந்திய ஆன்மீகத்தின் சாரம். கீதைக்கு அவர் எழுதியிருக்கும் பிரம்மாண்டமான உரை ஒரு அற்புதம். நித்யானந்தர் ஒரு முட்டாள் அல்ல; நூறு மேதைகளுக்கு சமமான அறிவுத் திறன் கொண்டவர். அந்த அறிவுத் திறனை அவர் சொத்து சேர்க்கவும், நடிகைகளுடன் சல்லாபம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டு விட்டார்.'

ஐயா, நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? நித்யானந்தர் முட்டாள் அல்ல என்றால் வேறு யார் முட்டாள்? எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று நீங்கள் சொல்லிவிட்டதால் நீங்களும் முட்டாள் இல்லை என்றாகிவிட்டது. பிறகு யார்தான் முட்டாள்? உங்கள் எழுத்துகளைப் படிப்பவர்களா? உங்கள் பேச்சைக் கேட்டு நித்யாவிடம் ஓடியவர்களா? உங்களைத் தலைக்குமேலே தூக்கிவைத்துக்கொண்டு ஆடும் உள்நாட்டு, வெளிநாட்டு ரசிகர்களா? குறைந்தபட்சம் அதையாவது நேர்மையாகச் சொல்லுங்களேன்.

சாருவைப் பொருத்தவரை, நித்யா செய்த தவறுகள் மூன்று. சொத்து சேர்த்தது. நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது. இந்த இரண்டையும் சாமியார் என்று வேஷம் போட்டுக்கொண்டு செய்தது. இதோ சாருவே சொல்கிறார்.

'நான் மிக வெளிப்படையாகவே I like wine, women and gods என்று சொல்லிக் கொள்பவன். இவ்வளவு வெளிப்படையாக இருக்கும் ஒரு மனிதனை - ஒரு எழுத்தாளனை உங்களால் சொல்ல முடியுமா? நித்யானந்தரோ ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை உபதேசம் செய்து விட்டு .... (பிரசுரிக்க முடியாத வார்த்தைகள்). அப்படிப்பட்ட அயோக்கியனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் கண்டீர்கள்?'

இருக்கிறது, ஐயா. சம்பந்தம் இருக்கிறது. சொல்லவா?

1) நித்யா சொல்லாமல் செய்யும் சமாசாரங்களை நீங்கள் சொல்லிவிட்டு செய்கிறீர்கள்.

2) உங்கள் இருவர் பின்னாலும் ஒரு மதிகெட்ட கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது.

3) நீங்கள் இருவரும் இந்து ஆன்மிகத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

4) நீங்கள் இருவருமே, நான்தான் மேதாவி, மற்றவர்கள் எல்லாம் சும்மா என்று சொல்லிக்கொள்கிறீர்கள்.

5) நீங்கள் இருவருமே உங்கள் வார்த்தைகளுக்கு உண்மையாக இருப்பதில்லை. ஊருக்கு ஒரு நியாயம், தனக்கு ஒரு நியாயம்.

6) தவறுகள் அம்பலப்படுத்தப்படும்வரை நீங்கள் உத்தமர்களாகத்தான் உங்களைக் காட்டிக்கொள்கிறீர்கள்.

7) இவ்வளவு நடந்த பிறகு, நித்யா பல்டி அடித்து எங்கோ ஓடிப்போய்விட்டார். நீங்கள் எங்கும் செல்லவில்லை. ஆனால், தொடர்ந்து பல்டி அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

8) நீங்கள் இருவருமே ஒட்டுண்ணிகள்.

9) அவமானத்தைத் துடைத்துப்போட்டுவிட்டு எதுவுமே நடக்காததுபோல் சிரிக்கத் தெரிந்த கபடதாரிகள் நீங்கள்.

10)விதவிதமான உங்கள் புகைப்படங்களை வைத்து ரசிகர்களை வலைவீசிப் பிடிக்கும் வஞ்சகர்கள் நீங்கள்.

11) நீங்கள் இருவருமே பெண்களை போகப்பொருளாக மட்டுமே காண்கிறீர்கள்.

12) உங்கள் இருவருக்குமே ஒரு மாயத்தோற்றம் தேவைப்படுகிறது. அதைப் பெறுவதற்காகவே நீங்கள் இருவரும் உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

13) நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதற்கான ஒரு மந்தையை நீங்கள் இருவருமே உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்.

14) நீங்கள் இருவருமே வியாபாரிகள். பணத்துக்காக எதையும் செய்ய தயங்காதவர்கள்.

15) சமுதாயத்தைச் சுரண்டிக்கொண்டே சமுதாயம் சாக்கடை என்று குற்றம் சாட்டுபவர்கள் நீங்கள்.

16) வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று நீங்கள் பினாத்துவதைக் கேட்க உங்கள் இருவருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தை நம்பித்தான் உங்கள் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.

17) உங்கள் இருவரது ஆன்மிகமும் பொய், உங்கள் இருவரது சித்தாந்தமும் ஆபத்தானவை.

18) இதுகூட கடந்து செல்லும் என்று முணுமுணுத்தபடி அடுத்த பதிவை எழுதவும், கை உயர்த்தி அடுத்த ஆசியை வழங்கவும் நீங்கள் இருவரும் தயாராகிவிட்டீர்கள்.

அடுத்து, நித்ய சைதன்யரின் சேஷ்ட சிஷ்யர் ஜெயமோகனாந்தாவின் பதிவுலக ஆசிரமத்துக்குச் செல்வோம்.

16 comments:

  1. Waau, great and knowledgeable comments! Appreciated!!

    ReplyDelete
  2. மானிடன்,

    இந்த கயவர்களை பற்றி எழுதி
    அசிங்கப்படவேண்டாம்.

    சாரு..போன்ற எழுத்து விபசாரிகளை
    நாம் தான் ஒதுக்க வேண்டும்.

    என்ன கொடுமை என்றால் இன்னும்,
    இவருக்காக ஒரு மொக்கை கூட்டம்
    துணை போவது.

    ReplyDelete
  3. அய்யா மானிடரே..
    முதலில் ஒருவிஷயத்தை நாம் புரிந்து கொள்வோம்.சாரு தற்போதைய மனநிலையில் இன்னும் என்ன வேண்டுமானாலும் எழுதுவார். பச்சையாக எழுதுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. கேவலமாக தற்போது அந்தர் பல்டி அடிப்பது அவருடைய வாசககளுக்கே சிரிப்பை வரவழைத்திருக்கும்.இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மானே தேனே அற்புதங்கள் நிகழ்த்தியவரே என்று புகழ்ந்த அவர்தான் தற்போது "நடிகையின் ................... ...க்கியவன்" கபடவேடதாரி என்று தன ஆத்ம குருவையே இகழ்கிறார். சொல்லப்போனால் நித்யானந்தனை விட பெரிய இழிமகன் சாருதான். யாராவது அவருக்கு பார்க் ஷெரட்டன் பாரில் நல்ல விலையுயர்ந்த ஒயினை வாங்கித் தந்தால் நிம்மதியடைவார்.அப்படியே ஐயோ என் நாய்க்குட்டிகள் பப்பு ஸோரோ பட்டினியாக இருக்கின்றனவே அவைகளுக்கு உணவு வாங்க 2000 ரூபாயாவது வேண்டுமே என்று வழக்கம் போல பிச்சை எடுத்து தன் கவனத்தை திருப்பிக் கொள்வார். சரி அவர் அப்பிடியே போகட்டும். ஜெயமோகானந்தா என்று ஜெயமோகனை இங்கு இழுக்கவேண்டிய அவசியமென்ன? அவர் தன்னுடைய எல்லைக்கு உட்பட்டே விமர்சனங்களை அளிக்கிறார்.சொல்லப்போனால் நித்யா விவகாரத்தில் அடக்கியே வாசித்திருக்கிறார் ஜெ. கலைஞர் ஜெயலலிதா , அஜித் விஜய் மாதிரி சாரு என்றவுடன் சும்மாவாவது ஜெயமோகனை இழுக்க வேண்டுமென்பது சட்டமாகிவிட்டதோ?

    ReplyDelete
  4. இவர்களுக்கு " தோல் " மிகக்கடினம். வலிக்காது,உறைக்காது.

    ReplyDelete
  5. பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க.

    ReplyDelete
  6. யாருய்யா இந்த சாரு ....ஆடு நனைது என்று ஓனாய் அழுத கதையாக.....இவர் என்ன உலகமகா தலைவரா?உலகமகா தலைவராக இருந்தாலும் தப்பு தப்பு தான்.....

    ReplyDelete
  7. 18 பாயிண்டுகளும் நச்...........!!!!!

    ReplyDelete
  8. மறுமொழி அளித்து ஊக்கப்படுததிய எண்ணத்துக்பூச்சி, Rajeshkumar, கக்கு மாணிக்கம், வால்பையன் அனைவருக்கும் நன்றி. உங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  9. நீங்கள் அளித்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி வினவு. நான் விடாமல் வாசிக்கும் ஒரு சில வலைத்தளங்களில் உங்களுடையது முதன்மையானது.

    ReplyDelete
  10. சபாஷ் மானிடா!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் மானிடன் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  12. இந்த பதிவை படித்து தங்கள் மேலான கருத்தை பதியவும்:

    ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?

    http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  13. நன்றி யுவன்பிரபாகரன். தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  14. நண்பர் மானிடன் அவர்களே
    சா,நி, யை உரித்துப் போட்டிருக்கிறீர்கள், இந்த சந்தர்ப்பவாதியை அடையாளம் காட்டியதற்கு நன்றிகள் பல, எழுதுங்கள் தொடர்ந்து,,,
    கவனித்தீர்கள் தற்போது சா,நி யின் வலைதளத்தை! ராஜசேகரின் தூக்கிப்பிடித்து சம்பாதித்த குமுதமும் சாநியும் தற்போது அவனை திட்டி சம்பாதிக்க முடிவு செய்துள்ளதை?? இது போன்ற தடித்த தோல் கொண்டவர்கள் எப்படியும் பிழைப்பார்கள் !

    ----புதியவன்--

    ReplyDelete
  15. appadi Podu. Excellent points, hats off. I eventually bought cople of books written by chru.. and came to know he is an idiot, trying to act like a Genious. Keep your good work. I'm impressed. :) :)

    ReplyDelete