Tuesday, March 9, 2010

ஜெயமோகனை ஏன் நிராகரிக்கவேண்டும்?


சடைமுடி, புலித்தோல், உத்திராட்சம், கமண்டலம் போன்றவை இல்லாவிட்டாலும் ஜெயமோகன் மனசளவில் தன்னை ஒரு மகரிஷியாகவே அனுமானித்துக்கொள்கிறார். அவரது வலைத்தள ஆசிரமத்துக்கு சிஷ்யகோடிகள் நித்தம் நித்தம் பல நூறு கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் இண்டர்நெட் வழியாக சந்தேக நிவாரணமும் தீட்சையும் அளித்து வருகிறார் ஜெயமோகானந்தா.

அவர் அளிக்கும் நீளநீளமான பதில்களை படிக்கும்போது முழு நிஷ்டையில் இருக்கும்போது எழுதினாரா அல்லது பாதி கலைந்த நிலையில் எழுதினாரா என்னும் சந்தேகம் ஏற்படுவதை தடுக்கமுடியாது. இந்து ஞான மரபின் மொத்த கொள்முதல் உரிமையாளராகத் தன்னை பாவித்துக்கொண்டு இந்த மகரிஷி அளிக்கும் விளக்கங்களை அற்பப் பதர்களால் புரிந்துகொண்டுவிடமுடியாது. இருந்தாலும் இவ்வளவு நீளமாக ஏதேதோ சமஸ்கிருதம் கலந்து எழுதியிருக்கிறாரே நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கும் என்று பக்தர்கள் கண்ணீர் மலங்க வாசித்து முக்தி பெறுகிறார்கள். இலக்கியத்தில் பல மாய யதார்த்த சித்து வேலைகள் செய்து வந்த ஜெ அது அதிகம் போணியாகாததால் இப்போது முழு நேரமும் பித்து வேலைகளே செய்து வருகிறார்.

இதோ ஒரு சிஷ்ய கடிதம்.

அன்புள்ள ஜெ, நான் ஒரு நவீன குருவின் ஆன்மீகப்பயிற்சி முறையில் சில பயிற்சிகளைச் செய்துவருகிறேன். கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக. அது எனக்கு மிகப்பெரிய மன ஆற்றலை அளித்திருக்கிறது என்று உணர்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள பதற்றங்கள் குறைந்தன. நான் திட்டவட்டமாக வாழ்க்கையை எதிர்கொள்ள அது எனக்கு உதவியது.

இப்போது இன்னொரு சாமியார் பற்றிவந்த செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. ஏனென்றால் என்னை மாதிரியே இவரை நம்பி இவர் காட்டிய வழிகளில் சென்று பயனடைந்த பலரை நான் அறிவேன். அவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கிறார்கள். சிலர் அவரை வசைபாடுகிறார்கள். சிலர் அவரை விடமுடியாமல் எல்லாமே மோசடி என்று சொல்கிறார்கள்.

நான் கேட்பதெல்லாம் அவரது யோகமுறைகள் மூலம் நாம் அடைந்த நன்மைகளை எப்படி நாம் நிராகரிக்க முடியும் என்றுதான். அவை உண்மையானவை தானே. அவரை தூக்கி வீசுவதுபோல அவர் சொன்ன விஷயங்களை முழுக்க தூக்கி வீசி விடமுடியுமா என்ன?

நான் இன்று ஒரு அமைப்பை அல்லது குருவை நம்பிக்கொண்டிருக்கிறேன் ஜெ. நாளைக்கு அந்த நம்பிக்கை இல்லாமலானால் என் நிலைமை என்ன ஆவது? அதற்கு நான் எப்படி என்னை தயார்ப்படுத்திக்கொள்வது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்கள் வரிகள் என்னை தெளிவாக்கக் கூடும் என்று நினைக்கிறேன். சிவ.சண்முகம்

இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடவேண்டும். சிவ. சண்முகம், கார்த்திக் சிதம்பரம், குமரகுருபன் என்று எண்ணற்ற புனைப் பெயர்களில் ஜெ தனக்குத்தானே மடல்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்று இலக்கிய, ஆன்மிகப் பீடத்தில் பலர் குற்றம் சுமத்துகிறார்கள். இலக்கியத்தில் இதெல்லாம் சகஜம் என்பதால் நாம் இந்தக் குற்றச்சாட்டுக்குள் இப்போது நுழைய போவதில்லை. மேலும், இப்படி திருவிளையாடல் சிவாஜி மாதிரி பாட்டும் நானே, பாவமும் நானே என்று தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக்கொள்வது இந்து ஞான மரபின் ஒரு கூறாக அல்லது அங்கமாகவும் இருக்கக்கூடும், யாருக்கு தெரியும்?

சரி, ஆதௌ கீர்த்தனாராம்பத்திலே நாம் பார்த்த கேள்விக்கு ஜெ அளிக்கும் விடைக்கு வருவோம்.

ஒட்டுமொத்த இந்து ஞானமரபை, இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாக அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது. திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான்.

ஆனால், ஓர் இந்துவாக உண்மையாக இருக்கும்பட்சத்தில் சத்தியம் தர்மம் என்ற இரு அம்சங்கள்மீது மட்டுமே ஒருவன் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். அமைப்புகள், தனிமனிதர்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் எதன்மீதும் அல்ல. அந்நிலையில் இந்த விஷயத்தில் எது உண்மையோ அது வெளிவரட்டும், எது தர்மமோ அது நிலைநாட்டப்படட்டும் என்று மட்டுமே அவன் எண்ண வேண்டும். அந்த நினைப்பு என் சஞ்சலத்தைப் போக்கியது.

மனித மொழியில் இதை மொழிபெயர்த்தால் கீழ்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்.

1) இந்து ஞானமரபை சிறுமைப்படுத்தும் செயல் நீண்டகாலமாகவே இங்கே நடந்துகொண்டிருக்கிறது. அதாவது இந்துக்களை வீழ்த்த சிலர் வஞ்சகமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் ஒருபகுதியாக நித்யானந்தா அம்பலப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கெனவே துவண்டு போயிருக்கும் ஞானமரபுக்கு இது ஓர் அடி.

2) நித்யாவைக் கண்டு பக்தர்கள் துவண்டு விடக்கூடாது. ஐயோ ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்று புலம்பக்கூடாது. இன்னும் இது போல் எத்தனையோ பேர் அம்பலப்படுத்தப்படலாம். நீங்கள் நம்பிய இன்னும் பல சாமியார்கள் உங்களை கைவிடலாம். இதுபோல் இன்னும் எத்தனையோ ஏமாற்றங்களை இந்து மதம் உங்களுக்கு அளிக்கலாம். ஆனால் நீங்கள் மதத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். இறுதியில் உண்மை நிலைநாட்டப்படும். சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும்.

பெரியவா, சின்னவா, பால பெரியவா, தேவநாதா, நித்யானந்தா என்று அனைவரும் உங்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள். நீங்கள் நம்பிய மகா புருஷர்கள் உங்களை கைவிடுவார்கள். ஆனால், நீங்கள் இந்து மதத்தை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது. நாம் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளவேண்டும்.

மற்றொரு இடத்தில், ஜெ இவ்வாறு எழுதுகிறார்.

இந்து மரபில் மூன்று கூறுகள் உள்ளன என்று சொல்லலாம். ஒன்று, தத்துவார்த்தமான தளம். இரண்டு , வழிபாடு,பக்தி சார்ந்த தளம். மூன்று, பழங்குடி நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த தளம். முதல்தளம் தியானம் போன்றவற்றையும், இரண்டாம் தளம் அந்தரங்கமான பக்தியையும் வழிபாடுகளையும், மூன்றாம்தளம் கூட்டுக்கொண்டாட்டமான வழிபாடுகளையும் முன்வைக்கிறது.

ஜெ சொல்படி பார்த்தால், நித்யானந்தா இந்த மூன்று தளங்களிலும் ஒரே சமயத்தில் இயங்கியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். கதவை திற, மனதை திற டைப்பில் தத்துவங்களை நிறைய வாரி பொழிந்திருக்கிறார். அவரது அந்தரங்கமான பக்தி இரண்டாவது தளத்தில் அம்பலப்பட்டுப்போனது. மூன்றாவது தளத்தில் வெளிபட்ட அவரது கொண்டாட்டமான வழிபாடுகள் நக்கீரன் சைட்டில் காணக்கிடைக்கின்றன.

இதுபோன்ற சாமியார்கள் ஏன் தோன்றுகிறார்கள் என்பதற்கு ஜெ இவ்வாறு பதிலளிக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டு என்று கண்ட முன்னோடி ஞானிகள் இந்து தத்துவ தளத்தை பரவலாக மக்களுக்குக் கொண்டு செல்ல அமைப்புகளை உருவாக்கினர். ராமகிருஷ்ண மடம் அவற்றில் முக்கியமானது. காலம் மாற மாற இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.

நித்யா மாட்டிக்கொண்டதால் இந்து மரபுக்கு எந்த கேடுகாலமும் வந்துவிடாது என்பதை எவ்வளவு அழுத்தமாக ஜெ பதிவு செய்திருக்கிறார் பாருங்கள்.

நித்யானந்தர் மாட்டிக்கொண்டது சமீப காலமாக நடந்துவரும் ஊடகப் படையெடுப்பின் ஒரு விளைவு. ஆனால் இதன்மூலம் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அந்நம்பிக்கையை இழக்க மாட்டார்கள். ஏற்கனவே சாய்பாபாவைப்பற்றி இதேபோல எத்தனையோ படங்கள் வெளிவந்தன. அவரது ஆசிரமத்திலேயே பாலியல்கொலைகள் நடந்தன. அவரது பக்தர்கள் அதை பகவானின் லீலை என்றே எடுத்துக்கொண்டார்கள். அவரை பயன்படுத்திய எத்தர்கள் அவர் லாபகரமாக இருக்கும்வரை அவரை விடமாட்டார்கள். ஆக அவருக்கு எந்தப்பாதிப்பும் நிகழவில்லை.

ஆயிரம் அடி வாங்கினாலும், நாம் ஒரு குருவின் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்பதை ஜெ வலியுறுத்துகிறார்.

குரு ஒரு வழிகாட்டி மட்டுமே. நாம் சென்று சேரும் புள்ளி அல்ல அவர். அவர் வழியாக நாம் சென்றுகொண்டிருக்கிறோம். அவரை நாம் கடந்துசெல்வதும்கூட சாத்தியமே. நாம் தேர்ந்துகொண்ட வழிக்கு ஏற்ப நம்முடைய இயல்புக்கு ஏற்ப நாம் குருநாதர்களை அடைகிறோம். முழுமையான மெய்ஞானிகூட ஒருவனுக்கு அவனது வழியைத்தான் காட்டமுடியும். அவனது ஞானமென்பது அவனே அடைவதாகவே இருக்கும்.

வீராவேசமாகவும் முத்தாய்ப்பாகவும் ஜெ உதிர்த்த முத்து இது.

இன்று இழிவுபட்டு நிற்பது நித்யானந்தர் என்ற மனிதரே ஒழிய எந்த மரபின் தோற்றத்தை அவர் தன் வேஷமாகக் கொண்டாரோ அந்த தோற்றம் அல்ல. அந்த வேறுபாட்டை இல்லாமலாக்கி நித்யானந்தரை முன்வைத்து இந்து மரபை எள்ளிநகையாட, சிறுமைசெய்ய முயல்வார்கள் என்பது உண்மையே. ஆனால் காலம்தோறும் எந்த மோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும் காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்து மதத்துக்கு எப்போது தீங்கு நேர்ந்தாலும் அங்கே பிரசன்னமாகி தடுத்தாட்கொள்ள முயல்கிறார் ஜெ. சமஸ்கிருத சுலோபம், கீதோபநிஷத் என்று பலவற்றில் இருந்தும் கொட்டேஷன்களை உருவிப் போட்டு, சாதனா, கைவல்யம், பிரபஞ்ச பிரம்மாண்டம், பதஞ்சலி யோகம், தாந்தரீகம், மாந்தரீகம், ஹடயோக வித்தை என்று பயமுறுத்தும் பதங்களை சேர்த்துப் போட்டு, ஹைஸ்பீட் டைப் ரைட்டிங்கில் ஏகப்பட்ட தத்துவங்களை உதிர்த்துக்கொண்டு போகிறார் ஜெ. ஆன்மிகம், போலி ஆன்மிகம் என்னும் தலைப்பில் அதிரடியாக ஒரு குறும்தொடரையும் ஆரம்பித்துவிட்டார்.

ஜெயமோகனின் தத்துவங்களை அகராதி கொண்டு மொழிபெயர்த்தால் நமக்குக் கிடைக்கும் இறுதி செய்தி ஒன்றுதான். இந்த நித்யாவை மட்டுமல்ல இன்னும் பல நூறு நித்யாக்களை நீங்கள் அம்பலப்படுத்தினாலும், காவிக்கொடி இமயத்தின் உச்சத்தில் பட்டொளி வீசி பறந்துகொண்டுதான் இருக்கும். இந்து ஞானமரபின் பொன்னுடல் மறைந்தாலும் அதன் பூதவுடல் மறையாது.

இனி, ஜெயமோகனை நாம் ஏன் நிராகரிக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை பட்டியலிடுவோம்.

1) சாமியார்கள் உருவாவதற்கான அடித்தளத்தை இவர் உருவாக்குகிறார், பலப்படுத்துகிறார்.

2) நித்யானந்தாவை அவர் நிராகரித்தாலும், குரு வழிபாட்டையும் சாமியார் வழிபாட்டையும் அவர் நிராகரிக்கவில்லை.

3) போலிகள் அம்பலப்பட்டு போகும்போது, அவர்கள் சார்ந்துள்ள இந்து மதம் பாதிப்படையாதவாறு தாங்கிப் பிடித்துக்கொள்கிறார்.

4) அசல் ஆன்மிகம், போலி ஆன்மிகம் என்று இரு பிரிவுகளை வசதியாக ஏற்படுத்திக்கொண்டு மக்களை குழப்புகிறார், ஏமாற்றுகிறார்.

5) இந்து மத சித்தாந்தம் என்னும் பெயரில் ஆபத்தான அரசியல் பிரசாரங்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்துவருகிறார். (உதாரணம், இந்துக்களுக்கு எதிராக ஒரு கூட்டம் வஞ்சகம் செய்கிறது போன்ற விஷமங்கள்).

6) பிஜேபி போன்ற இந்துத்துவா சக்திகளின் இலக்கிய, அரசியல் குரலாக இயங்கிவருகிறார்.

7) பெரியாருக்கு எதிராக, அம்பேத்கருக்கு எதிராக, கம்யூனிசத்துக்கு எதிராக பொய் பிரசாரங்களை, திட்டமிட்ட அவதூறுகளை கட்டவிழ்த்துவிடுகிறார்.

8) இந்து மத அடையாளத்தை செழுமைப்படுத்தும் வகையில், காந்தியை புனிதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

9) இந்து மதத்தின் மீது மக்களுக்கு விரக்தியோ வெறுப்போ ஏற்படாதவாறு கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்.

குறிப்புகள் :

ஜெயமோகனின் ஆசிரமத்துக்குச் செல்லும் வழி இது. இத்தனை நடந்த பிறகு, நித்யானந்தர் என்னும் பெயர் கொண்ட இன்னொரு சாமியார் பற்றி இங்கே சிலாகித்து எழுதியிருக்கிறார். சாமியாரின் பல ஆபாசமான புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். மேலே மேற்கோள் காட்டப்பட்ட அவரது கட்டுரைகளின் தலைப்புகள் - ஜாக்ரதை, ஆனமிகம், போலி ஆன்மிகம் 1-5 பகுதிகள்.

தொடர்புடைய முந்தைய கட்டுரை - நித்யானந்தாவும் நிவேதிதானந்தாவும்

12 comments:

  1. புற உலகோடு மனத்ததளவில் தொடர்பற்று இருத்தல் என்பதையே எல்லா சாமியார்களும், ஜெயமோகன்களும் சமாதி நிலையாக, ஞானமாக ரீல் விடுகின்றனர். இதை நவீன சாமியார்கள் வாழ்க்கை நெருக்கடிகளின் நிவாரணமாக அதே வாழ்க்கையை வைத்து அளக்கும்போது ஜெயமோகன் வார்த்தைகளை வைத்து என்னமோ இந்து ஞானமரபில் புதையுண்டிருப்பதாக ஃபிலிம் காட்டுகிறார். ஏமாறுவதற்கு இருக்கும் கூட்டம் தயாராக இருக்கும் போது இவர்கள் அறிவாளிகளாக பிதுங்குகிறார்கள்.

    எளியமுறையில் ஜெ.மோவை அடையாளம் காட்டிய பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. டேய் வெண்ணைவெட்டி மைனர் குஞ்சு,
    ஜெ.மோ வை நீ நிராகரிப்பது இருக்கட்டும்...
    நீ எழுதுறக எந்த நாயாவது படிக்கிதா பாரு...
    இல்லை, வேற வேலையப்பாரு..

    ReplyDelete
  3. இந்து மதத்தின் ஆபாச அம்மணத்திற்க்கு இந்துத்துவா ஜட்டி அணிவித்து அவ்வப்போது நாங்களும் யோகியர்கள் என்பதை அவ்வப்போது ”ஜெமோ” எழுத்தில் வெளிபட்டு தான் வந்திருக்கின்றது.. உங்களை போன்ற தோழர்கள் அதை கிழித்து காட்டியமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மானிடன், ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் பற்றியும் அம்பலப்படுத்தவும்.

    ReplyDelete
  5. அட்டகாசமான பதிவு. என் நண்பர்களில் சிலர் ஜெவின் தீவிர வாசகர்கள்/வாசகிகள். அவர்களிடம் இதை படிக்க சொல்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி யுவன்பிரபாகரன். உங்கள் எண்ணங்களை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  7. நல்ல பதிவு .ஜெயமோகனின் உதவாக்கரை பிதற்றல்களால் நித்தியானந்த போன்ற கயவர்களுக்கே லாபம். பொது மக்கள் பாதிக்கபடுவதை அரசு தான் சட்டம் போட்டு தடுக்க வேண்டும் .அரச அதிகாரிகளே இந்த கயவர்களின் ஆசிக்கு வரிசையில் நின்றால் ??? புரட்சிகர அமைப்புகள் தான் இந்த கேவலத்தை ஒழிக்க வேண்டும்.

    ReplyDelete
  8. நல்ல பதிவு .ஜெயமோகனின் உதவாக்கரை பிதற்றல்களால் நித்தியானந்த போன்ற கயவர்களுக்கே லாபம். பொது மக்கள் பாதிக்கபடுவதை அரசு தான் சட்டம் போட்டு தடுக்க வேண்டும் .அரச அதிகாரிகளே இந்த கயவர்களின் ஆசிக்கு வரிசையில் நின்றால் ??? புரட்சிகர அமைப்புகள் தான் இந்த கேவலத்தை ஒழிக்க வேண்டும்.

    yogan

    ReplyDelete
  9. ஒன்னாம் நெம்பர் மடையனுகப்பா நீங்க , அந்தாளு என்ன சொன்னார் நீங்க என்னத்த விமர்சிக்கறீங்க ?

    கடைசியா எல்லாரையும் செயமோகன் பக்கம் கொண்டு நிறுத்தாம ஓயமாட்டூங்க போல

    ReplyDelete
  10. ஜெமோவின் சுயரூபத்தை கிழித்து தொங்கவிட்டதற்கு நன்றி

    ReplyDelete
  11. Valthukal tholar manidn-nithiyanantha

    ReplyDelete